Sunday, May 19, 2019

தேடிச் சோறு நிதம் தின்று –

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர் 
வாடப் பலசெயல்கள் செய்து – நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

பாரதி கவிதைகள்-



காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே
நோயிலே படுப்பதென்ன கண்ண பெருமானே – நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே 
காற்றிலே குளிர்ந்ததென்ன கண்ண பெருமானே – நீ
கனலிலே சுடுவதென்ன கண்ண பெருமானே 
சேற்றிலே குழம்பலென்ன கண்ண பெருமானே – நீ
திக்கிலே தெளிந்ததென்ன கண்ண பெருமானே 
ஏற்றி நின்னைத் தொழுவதென்ன கண்ண பெருமானே – நீ
எளியர் தம்மைக் காப்பதென்ன கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்ன கண்ண பெருமானே – நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்ன கண்ண பெருமானே